கனடாவில் வீடு விற்பனை: முக்கிய நகரமொன்றின் தற்போதைய நிலை
Toronto
Canada
World
By Laksi
கனடாவின் (Canada) ரொறன்ரோ மாகாணத்தில் வீட்டு விற்பனைகளில் குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தகவலை ரொறன்ரோ (Toronto) பிராந்திய ரியல் எஸ்டேட் சபை அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இந்த ஆண்டு மே மாதம் வீட்டு விற்பனை 21.7 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது.
வீட்டு விற்பனைகளில் வீழ்ச்சி
கடந்த மே மாதம் 7013 வீடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், 2023 ஆம் ஆண்டு மே மாதத்துடன் ஒப்பீடு செய்யும் போது 8960 வீடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும் ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் வீடுகளின் விலைகள் 2.5 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது.
கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது வீடொன்றின் சராசரி விலை 1165691 டொலர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்