அழகாக தீப்பற்றி எரிந்துகொண்டிருக்கும் ரஷ்யாவின் S-300
‘ரஷ்யாவின் உள்ளே அழகாக தீப்பற்றி எரிந்துகொண்டிருக்கின்றது ரஷ்யாவின் S-300 வான்பாதுகாப்பு ஏவுகணை..’ என்று உக்ரேனின்(Ukraine) அமைச்சர் ஒருவர் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அமெரிக்காவின் ஆயுதங்கள் நேற்றைய தினம்(4) முதற்தடவையாக ரஷ்ய நிலப்பரப்பினுள்ளே பிரயோகிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தீப்பற்றி ரஷ்யாவின் எஸ்-300 வான்பாதுகாப்பு ஏவுகணைச் சாதனம் எரிந்துகொண்டிருக்கும் புகைப்படத்தை காட்சிப்படுத்தியபடி இப்படியான பதிவை அவர் சமூகவலைத்தளத்தில் வெளியிட்டிருந்தார்.
ரஷ்யாவின் உள்ளே அமெரிக்க ஆயுதங்களைப் பயன்படுத்தக்கூடாது என்று இதுவரை விதிக்கப்பட்டிருந்த தடையை கடந்தவாரம் அமெரிக்கா தளர்த்தியதைத் தொடர்ந்து, நேற்றைய தினம் ரஷ்யாவின் Belgorod நகரத்தின்மீது அமெரிக்காவின் M142 HIMARS High Mobility Artillery Rocket System கொண்டு தாக்குதலை மேற்கொண்டிருந்தது உக்ரேன்.
இந்தத் தாக்குதல் பற்றியும், ரஷ்யாவின் பதிலடி எப்படி இருக்கப்போகின்றது என்பது பற்றியும் ஆராய்கின்றது இன்றைய 'உண்மையின் தரிசனம்' நிகழ்ச்சி:
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |