தொடருந்தின் முன் பாய்ந்து உயிரைமாய்த்த 14 வயது மாணவன்!
Sri Lanka Police
Sri Lanka
Sri Lanka Police Investigation
By Sathangani
கல்ஓயாவில் இருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்த தொடருந்தின் முன் பாய்ந்து பாடசாலை மாணவர் ஒருவர் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.
தம்பலகமுவ - முள்ளிப்பொத்தானை தொடருந்து நிலையத்திற்கு அருகில் நேற்று (11) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் முள்ளிப்பொத்தானை பிரதேசத்தில் வசித்து வந்த 14 வயது மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
காவல்துறையினர் விசாரணை
மாணவனின் மரணத்திற்கான காரணம் தொடர்பில் இதுவரையில் எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.
இந்தநிலையில் உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கந்தளாய் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தம்பலகமுவ காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 1 நாள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
5 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்