சட்டவிரோதமான முறையில் போதைப்பொருள் விற்ற வாலிபன் கைது
தடை செய்யப்பட்ட போதை மருந்தான Pregabalin 150 mg வில்லைகளை விற்பனைக்காக வைத்திருந்த சந்தேக நபர் நேற்றைய தினம் (13) வத்தளையில் கைது செய்யப்பட்டார்.
நேற்றைய தினம் கந்தானை காவல் துறையினருடன் இணைந்து இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தேடுதலின் போது
தேடுதலின் போது, வத்தளை கெரவலப்பிட்டி மின் உற்பத்தி நிலையத்திற்கு அருகில் சட்டவிரோதமான முறையில் விற்பனைக்காக எடுத்துச் செல்லப்பட்ட Pregabalin 150 mg மருந்து வில்லைகளில், சுமார் 300 மாத்திரைகள் அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டது.
சட்டவிரோதமான முறையில் குறித்த போதைப்பொருள் மாத்திரைகளை விற்பனை செய்த நபர் 26 வயது மதிக்கத்தக்க வாலிபர் என்றும், வத்தளை பகுதியை சேர்ந்தவர் என்றும் தெரிய வந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்.
கைப்பற்றப்பட்ட Pregabalin 150 mg மருந்து வில்லைகள் 300 உம், கைது செய்யப்பட்ட சந்தேக நபரும் மேலதிக விசாரணைகளுக்காக கந்தானை காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.