2025 சுற்றுலாத்துறையில் எதிர்பார்க்கப்படும் பாரிய மைல்கல்
2025ஆம் ஆண்டில் 25 இலட்சம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு வரவழைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, இவ்வருடம் சுற்றுலாத்துறையின் மூலம் ஐந்து பில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நமது நாட்டில் நிலவும் பொருளாதார திவால் நிலையில் இருந்து விடுபட சுற்றுலாத்துறையை மேம்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அந்நிய செலாவணி
மேலும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை விமானம் மூலம் கூட கொண்டு செல்வது, சுற்றுலாத்துறை மூலம் கிடைக்கும் அந்நிய செலாவணியில் இருந்து வாகனங்களை இறக்குமதி செய்வது, நாட்டின் கடனை செலுத்துவது போன்றவற்றின் மூலம் நாட்டை பொருளாதார திவால்நிலையில் இருந்து காப்பாற்ற முடியும் எனவும் பிரதியமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
2018ஆம் ஆண்டிற்குப் பின்னர் 2024ஆம் ஆண்டில் 20 இலட்சத்திற்கும் அதிகமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சிகிரியா, எல்ல, யால போன்ற இடங்களில் நீண்ட வரிசையில் நிற்பதைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |