தென்னிலங்கையில் சித்திரவதைக்கூடம் கண்டுபிடிப்பு: தப்பியோடிய கும்பல்
நாட்டின் தென்பகுதியில் வீடொன்றில் செயற்பட்டு வந்த சித்திரவதைக்கூடம் ஒன்றை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
களுத்துறையில் போதைப்பொருள் தொடர்பான பணத் தகராறு காரணமாக நபர் ஒருவரை கூரிய ஆயுதங்களால் தாக்கிய கும்பலைச் சேர்ந்த 7 பேர் கைது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
களுத்துறை, கலமுல்ல, லாகோஸ்வத்த பிரதேசத்தில் வைத்து 18, 20, 25, 27 மற்றும் 28 வயதுடைய இளைஞர்களே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
காவல்துறையினர் சுற்றிவளைப்பு
இதேவேளை குறித்த பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, ஒரு வீட்டினுள் புகுந்த போது வீட்டில் இருந்த பலர் தப்பி ஓடியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
குறித்த வீட்டினுள் சோதனை மேற்கொண்ட போது கை கால்கள் கட்டப்பட்டு, கொடூரமாக தாக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டிருந்த இளைஞனை காவல்துறையினர் காப்பாற்றியுள்ளனர்.
இந்த நிலையில் அந்த வீடு ஒரு சித்திரதைக்கூடம் போன்று செயற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
போதைப்பொருட்கள் மீட்பு
இதன்போது இளைஞனை தாக்குவதற்கு பயன்படுத்திய 3 கூரிய வாள்கள், ஹெரோயின், ஐஸ் போதைப்பொருள் மற்றும் போதைப்பொருட்கள் அடங்கிய சிறிய பொதிகள், பொதியிடும் பொருட்கள் என்பன காணப்பட்டதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
நாடளாவிய ரீதியில் காவல்துறை விசேட சோதனை நடவடிக்கையின் கீழ் கடந்த 24 மணித்தியாலமேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் 1,865 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |