பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் கோரப்படுகின்றன
நடைபெற்று முடிந்த 2022 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையின் மீள் ஆய்வு பெறுபேறுகளின்படி, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு 2022(2023) கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பம் கோரியுள்ளது.
கடந்த நவம்பர் 24, 2023 அன்று வெளியிடப்பட்ட 2022(2023) மீள் திருத்தப் பெறுபேறுகளின் அடிப்படையில் தகுதியுடைய புதிய விண்ணப்பதாரர்களிடமிருந்து இணையம் மூலம் விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
இதேவேளை இன்று (22) முதல் 29 வரை விண்ணப்பங்கள் கோருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தல்
அதன்படி, விண்ணப்பதாரர்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.ugc.ac.lk க்குச் சென்று விண்ணப்பங்களை முறையாகப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், பல்கலைக்கழகங்கள், வளாகங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களால் நடத்தப்படும் திறன் தேர்வுகளின் தற்போதைய படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இந்த வாய்ப்பு பொருந்தாது என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பரீட்சை முடிவுகள்
2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை மீள் பரிசீலனை செய்வதற்கு இம்முறை 60,336 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
இதேவேளை 2022ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை முடிவுகள் கடந்த செப்டெம்பர் மாதம் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |