பொதுமக்களுக்கு காவல்துறை தலைமையகம் விடுத்துள்ள எச்சரிக்கை

Nihal Talduwa Sri Lanka Police Sri Lanka Myanmar
By Sathangani Dec 26, 2023 05:02 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

நாட்டிலுள்ள பொதுமக்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என சமூக வலைத்தளங்களில் வெளியாகும் போலி விளம்பரங்களில் சிக்கிக் கொள்ள வேண்டாம் என காவல்துறை தலைமையகம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை சரியான முறையில் வெளிநாடு செல்வதன் மூலம் ஏற்படும் பிரச்சினைகளுக்கு மாத்திரம் இலங்கை அதிகாரிகளால் தலையீடு செய்ய முடியும் எனவும் காவல்துறை பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

மியன்மாரில் சிக்கியுள்ள இலங்கையர்கள் தொடர்பில் கொழும்பில் நேற்று (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

திடீரென உயிரிழந்த யாழ் பல்கலை மாணவி! வெளிவரும் பகீர் தகவல்கள் (படங்கள்)

திடீரென உயிரிழந்த யாழ் பல்கலை மாணவி! வெளிவரும் பகீர் தகவல்கள் (படங்கள்)


மியன்மாரில் 56 இலங்கையர்கள்

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் 

மியன்மாரில் இலங்கையர்கள் குழுவொன்று இணைய அடிமைத்தனம் என்ற அடிப்படையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் மனித கடத்தல் மற்றும் கடல்சார் குற்றப்பிரிவு என்பன விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.

குற்றவியல் விசாரணை திணைக்களம் cid இலங்கை srilanka

கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் மூன்று இலங்கையர்கள் மற்றும் சீன பிரஜை ஒருவர் உட்பட 4 பேரிடம் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக காவல்துறை பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

மியன்மாரின் பயங்கரவாத குழு ஒன்றின் முகாமில் 56 இலங்கையர்கள் வலுக்கட்டாயமாக தடுத்து வைக்கப்பட்டு இணைய அடிமைகளாக பணிபுரிந்து வருகின்றனர்.

2022ஆம் ஆண்டு முதல் இலங்கை இளைஞர்கள் இந்த அவலத்தை எதிர்நோக்கி வருவதாகவும் வெளிவிவகார அமைச்சு இதற்கு முன்னர் 32 இலங்கையர்களை பல சந்தர்ப்பங்களில் மீட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொழும்பில் கடைத் தொகுதியில் தீ விபத்து: பொருட்கள் எரிந்து நாசம் (படங்கள்)

கொழும்பில் கடைத் தொகுதியில் தீ விபத்து: பொருட்கள் எரிந்து நாசம் (படங்கள்)


இலங்கை தூதரகத்தின் உதவி

தற்போது மியன்மாரில் இருக்கும் இலங்கையர்களை மீட்பதற்காக வெளிவிவகார அமைச்சு ஏற்கனவே யங்கூனில் உள்ள இலங்கை தூதரகத்தின் உதவியை நாடியுள்ளது.

பொதுமக்களுக்கு காவல்துறை தலைமையகம் விடுத்துள்ள எச்சரிக்கை | A Warning Issued By Police Headquarters To Public

இதற்கிடையில் மியன்மார் பயங்கரவாத முகாமில் சிக்கியுள்ள இலங்கை இளைஞர்களை விடுவிப்பதற்காக ஆறு நாடுகளை உள்ளடக்கிய கூட்டு முயற்சி ஒன்று இடம்பெற்று வருகின்றது.

இந்தியா, பூட்டான், பங்களாதேஷ், மியன்மார், தாய்லாந்து மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுடன் இணைந்து சிறைபிடிக்கப்பட்ட இலங்கையர்களை மீண்டும் தாயகத்திற்கு அழைத்து வருவதற்கான செயற்பாடுகள் இடம்பெறுகின்றன” என நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

சட்டவிரோதமான முறையில் மதுபானம் விற்பனை : மூன்று இடங்கள் காவல்துறையினரால் முற்றுகை

சட்டவிரோதமான முறையில் மதுபானம் விற்பனை : மூன்று இடங்கள் காவல்துறையினரால் முற்றுகை



செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!



ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
நன்றி நவிலல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025