மியன்மாரில் பயங்கரவாத பிடியில் இருந்து தப்பிய இலங்கையர்கள்
மியன்மாரில் பயங்கரவாத அமைப்பின் பிடியில் வலுக்கட்டாயமாகத் தடுத்து வைக்கப்பட்டு இணைய அடிமைகளாக இருந்த 56 இலங்கையர்களில் ஐவர் தப்பி நேற்று நாடு திருப்பினர்.
தப்பிய ஐவரில் மூவர் வர்த்தக, ஆட்கடத்தல் மற்றும் கடல்சார் குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு வாக்குமூலம் அளித்துள்ளனர்.
விசாரணைகள்
இந்நிலையில், மியன்மாருக்கு சட்டவிரோதமாக இலங்கையர்களை அனுப்புவது தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் ஆட்கடத்தல், கடத்தல் விசாரணை மற்றும் கடல்சார் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நடத்தப்பட்ட விசாரணைகள் அதன் பணிப்பாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் சமரகோன் பண்டா தலைமையில் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.
இதன்போது, அரலகங்வில, வதுரேகம மற்றும் தொரதியாய பிரதேசங்களில் வசிக்கும் மூன்று தரகர்கள் இலங்கையர்களை சுற்றுலா விசா மூலம் மியன்மாருக்கு அனுப்பியுள்ளது தெரியவந்துள்ளது.
தரகர்கள் தப்பியோட்டம்
ஆனால் தற்போது, சந்தேகநபர்களான குறித்த மூன்று தரகர்களும் வேறு இடங்களுக்கு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.
மேலும், இது தொடர்பான விரிவான விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |