பதில் காவல்துறை பரிசோதகர் ஒருவரை தாக்கிய விமானப்படை வீரர் கைது
Sri Lanka Police
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
Sri Lanka Air Force
By Dilakshan
பதில் காவல்துறை பரிசோதகர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் விமானப்படை வீரர் ஒருவரை கல்கிரியாகம காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்த விமானப்படை வீரருக்கு எதிராக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பேரில் பிரதிவாதியாக அழைக்கப்பட்டு விசாரணைக்கு அழைக்கப்பட்ட போதே குறித்த சந்தேகநபர் முறைகேடான முறையில் செயற்பட்டுள்ளார்.
அவரின் வெறித்தனமான நடத்தையைத் தவிர்க்க பதில் காவல்துறை பரிசோதகர் ஆலொசனை வழங்கி கொண்டிருந்த போது அவரின் முகத்தில் பலமுறை தாக்கியுள்ளார்.
கைது நடவடிக்கை
இந்நிலையில், கைது செய்யப்பட்டவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கடமையாற்றும் திபுல்வெவ பிரதேசத்தை சேர்ந்த விமானப்படை வீரர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்த காவல்துறை பரிசோதகர் கல்கிரியாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி