மீனவர்களுக்கு விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை
Sri Lanka
Sri Lanka Fisherman
By Sumithiran
புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகள் இன்று (30) கொந்தளிப்பாக காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்த கடற்பரப்புகளில் மணிக்கு 50 தொடக்கம் 60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசுவதுடன் அலைகள் எழும்பக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனவே குறித்த கடற்பரப்பில் கடற்றொழில் மற்றும் கடலட்டை நடவடிக்கைகளில் ஈடுபடும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு திணைக்களம் தெரிவித்துள்ளது.
