மர்மமான முறையில் உயிரிழந்த பெண் - காவல்துறை தீவிர விசாரணை..!
Colombo
Sri Lanka Police Investigation
Death
By Dharu
மொரட்டுவ லுணாவ பாலத்தின் முகத்துவார பகுதியில் வீழ்ந்து பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக மொரட்டுவ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மொரட்டுவை லக்ஷபதி பிரதேசத்தில் வசிக்கும் 55 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெண் நேற்றிரவு வீட்டில் இருந்ததாகவும் அவரது சடலம் இன்று காலை முகத்துவாரத்தில் மிதந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விசாரணை
மேலும், குறித்த பெண்ணின் மரணம் தொடர்பில் மொரட்டுவ காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி