யாழ்ப்பாணத்தில் இன்றும் பெண்ணொருவர் கைது
யாழ்ப்பாணம் வடமராட்சி துன்னாலை மேற்கு பகுதியில் பெண்ணொருவர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார்.
37 வயதான குறித்த பெண் நெல்லியடி காவல்துறையினரால் இன்றையதினம் (20) கைதுசெய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட பெண்ணிடமிருந்து 720 மில்லி கிராம் அளவுள்ள ஹெரோயின் மீட்கப்பட்டதுடன் 23,000 ரூபா பணமும் கைப்பற்றப்பட்டது.
கைது செய்யப்பட்ட பெண்ணிடமிருந்து
குறித்த பணம் போதைப்பொருள் விற்பனை மூலம் கிடைத்திருக்கலாமென காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டனர்.
சந்தேகநபரை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
நேற்றையதினமும் பெண்ணொருவர் கைது
இதேவேளை நேற்றைய தினமும் துன்னாலை கிழக்கு பகுதியில் 51 வயதான பெண்ணொருவர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டநிலையில் குறித்த நபரை இன்று(20) வரை காவல் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரிக்க காவல்துறையினருக்கு அனுமதித்து பருத்தித்துறை நீதவான் உத்தரவிட்டார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |