யாழில் போதை மாத்திரைகளுடன் காவல்துறையிடம் சிக்கிய இளைஞன்
யாழ்ப்பாணம்(Jaffna) - சாவகச்சேரி காவல்துறை பிரிவிற்குட்பட்ட மட்டுவில் பகுதியில் போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கை நேற்று(07.01.2025) இடம்பெற்றுள்ளது.
வல்வெட்டித்துறை பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
சோதனை நடவடிக்கை
மட்டுவில் பகுதியில் சாவகச்சேரி காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே 50 போதை மாத்திரைகளுடன் குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், கைதான சந்தேக நபரை மேலதிக விசாரணைகளின் பின்னர் சாவகச்சேரி நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, கிளிநொச்சி காவல்துறை பிரிவுக்குட்பட்ட ஏ 9 வீதியில் இரும்பு வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் கடை உரிமையாளர் 30 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினால் நேற்றிரவு (07.01.2025) கைது செய்யப்பட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |