கிளிநொச்சியில் அரங்கேறிய கொடூரம்! யுவதி மீது கூட்டுப் பாலியல் அத்துமீறல் : நால்வர் கைது
கிளிநொச்சி - சாந்தபுரம் பகுதியில் யுவதி ஒருவர் ஆயுத முனையில் பலரால் தவறான முறைக்கு உட்படுத்தப்பட்ட கொடூர சம்பவம் தொடர்பில் நான்கு சந்தேகநபர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட யுவதி உடனடி மருத்துவ சிகிச்சைக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சாந்தபுரம் பகுதியில் இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் கிளிநொச்சி காவல்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு குறித்த நான்கு சந்தேகநபர்களையும் கைது செய்துள்ளனர்.
நீதிமன்றத்தில் முன்னிலை
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து முன்னெடுக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |