காலியில் கைத்துப்பாக்கியுடன் யுவதி ஒருவர் கைது
Sri Lanka Police
Galle
Crime
Law and Order
By Shalini Balachandran
காலி இக்கடுவ பிரதேசத்தில் இயங்கும் நிலையில் உள்ள கைத்துப்பாக்கியுடன் 22 வயது யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த யுவதி நேற்றையதினம் (26) கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு, யுவதி கைதானபோது அவரிடமிருந்து 5 கைத்தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
திட்டமிடப்பட்ட குற்றம்
இந்த நிலையில் குறித்த யுவதி திட்டமிட்ட குற்றச்செயல்கள் வலையமைப்புடன் தொடர்புபட்டவரா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணையின் போது, இராணுவத்தில் பணியாற்றிய யுவதியின் மூத்த சகோதரன் கடந்த வருடம் இராணுவத்தில் இருந்து விலகி வெளிநாட்டுக்குச் சென்றுள்ளாரென தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம் 1 மணி நேரம் முன்
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி