மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட இளம்பெண்
தெல்தெனிய, உதிஸ்பட்டுவ, ரங்கல, ஹக்மன பகுதியைச் சேர்ந்த 22 வயதான ஆடைத் தொழிலாளியான யுவதி ஒருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டார்.
ரங்கல காவல் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணை நடத்திய ரங்கல காவல் நிலைய பிரதம ஆய்வாளர் நிஷாந்த ஜெயரத்ன உள்ளிட்ட குழுவினர், நீதிபதி உத்தரவைப் பெற்று உடலை மீட்டனர்.
அடையாளம் காணப்பட்ட உடல்
மீட்கப்பட்ட பெண் உடல், உதிஸ்பட்டுவ, ஹக்மன பகுதியைச் சேர்ந்த 22 வயதான வீரசேகர முதியான்சலாகே ஹீங்கிபிடகேதர வசன சந்தமாலி என்பவருடையது என ரங்கல காவல் நிலையத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

நீதவானின் உத்தரவு
தெல்தெனிய நீதவான் கமல் சஞ்சய ஜெயதிலக, சடலம் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் நேரில் சென்று விசாரணை நடத்தியதுடன், தெல்தெனிய மருத்துவமனையின் சட்ட வைத்திய அதிகாரியைக் கொண்டு சடலத்திற்கு மேலதிக பிரேதப் பரிசோதனை நடத்தி, அதுகுறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு ரங்கல காவல் நிலைய பொறுப்பதிகாரிக்கு உத்தரவிட்டார்.

images credit -lankadeepa
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |