யாழில் பெருமளவான போதைப்பொருட்களுடன் சிக்கிய இளைஞன்
யாழில்(Jaffna) பெருமளவான போதைப்பொருட்களுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை யாழ். மாவட்ட காவல்துறை புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய இன்று(08.03.2025) மானிப்பாய் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
கைது நடவடிக்கை தொடர்பில் தெரியவருகையில், “வண்ணார் பண்ணை சிவன் கோயிலுக்கு பின் வீதியான மானிப்பாய் வீதிக்கு அண்மித்த ஒரு வீட்டில் வைத்து கஞ்சா கலந்த மாவா பாக்கு தயாரித்து கொண்டிருந்த பொழுது யாழ். மாவட்ட காவல்துறை புலனாய்வு பிரிவினரும் போதை ஒழிப்பு பிரிவும் இணைந்து சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.
காவல்துறை விசாரணை
இதன்போது, 24 வயதுடைய இளைஞன் கைது செய்யப்பட்டதுடன் கஞ்சா கலந்த 4 கிலோ 250கிராம் எடையுள்ள மாவா பாக்கு, 12 கிலோ 500 கிராம் எடையுடைய பீடித்தூள் மற்றும் 24ரின் வாசனைத் திரவியம் போன்ற பொருட்களும் கைபற்றபட்டுள்ளன.
மேலும், கைதான சந்தேக நபரை மேலதிக விசாரணைகளின் பின்னர் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
5 நாட்கள் முன்