அந்தப்பதவியால் பெரும் மகிழ்ச்சியில் திளைத்தேன் : பெரும் பூரிப்பில் மகிந்த
நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபர் முறைமையை நீக்குவதே சிறந்ததாக இருக்கும் என முன்னாள் அதிபரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மகிந்த ராஜபக்ச கருத்து வெளியிட்டதுடன், அந்த பதவியை தாம் அனுபவித்து மகிழ்ந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
நாட்டின் அரசியல் நிலவரங்கள் குறித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், நாட்டின் அரசியல் நிலைமை நன்றாக இருப்பதாகவும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபர் முறைமையை நீக்குவதே சிறந்தது எனவும் தெரிவித்தார்.
சரியான நேரத்தில் களமிறங்கவுள்ள வேட்பாளர்
“முழு நாடும் இதை ஒழிக்கக் கோருவதால், இது ஒழிக்கப்பட வேண்டும். "அதிபர் தேர்தலை ஒத்திவைக்க முயற்சிப்பது எதிர்க்கட்சிகளுக்கு ஒரு பொறியாக இருக்கலாம். அதிபர் ரணில் விக்ரமசிங்கவை நாங்கள் நன்கு அறிவோம்" என்று அவர் கூறினார்.
"எந்த தேர்தல் வந்தாலும் எங்கள் வேட்பாளர் வெற்றி பெறுவார். எங்கள் வேட்பாளர் சரியான நேரத்தில் மேடைக்கு வருவார். அதுவரை காத்திருங்கள்" என்றார்.
அநுரகுமாரவின் இந்திய பயணம்
தேசிய மக்கள் சக்தியின் (NPP) தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவின் இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் குறித்து கருத்து தெரிவித்த அவர், இந்தியா போன்ற நாடுகளுடன் இருதரப்பு உறவுகளை ஏற்படுத்துவதன் முக்கியத்துவத்தை NPP இறுதியாக உணர்ந்துள்ளது குறித்து மகிழ்ச்சியடைவதாக தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |