நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தல்: ரணிலுக்கு அதிகரிக்கும் ஆதரவாளர்கள்
எதிர்வரும் அதிபர் தேர்தலில் தற்போதைய ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கவுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
மாத்தளை மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள் குழுவுடனான சந்திப்பின் போதே இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன், “நாடு பொருளாதார ரீதியாக வீழ்ச்சியடைந்து நாட்டைக் கைப்பற்றுவதற்கு எந்தத் தலைவரும் முன்வராத வேளையில் ரணில் விக்ரமசிங்கவிற்கு தனது ஆதரவைக் காட்ட அவர் தீர்மானித்தார்.
ஆதரவு
இது என்னுடைய தனிப்பட்ட முடிவு, இது நான் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியின் முடிவு அல்ல. எங்கள் கட்சியில் இருந்து ஒரு வேட்பாளரை முன்வைப்பதா அல்லது வேறு வேட்பாளருடன் கூட்டணி அமைப்பதா என்பது குறித்து எங்கள் கட்சி இன்னும் முடிவு செய்யவில்லை.
எனவே நாட்டைப் பற்றி சிந்தித்து தரணில் விக்ரமசிங்கவிற்கு எனது ஆதரவை வழங்குகின்றேன்” என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |