துவாரகா தொடர்பில் அருணாவின் பித்தலாட்டம்! மரபணு பரிசோதனையை கோரும் உறவினர்கள் (காணொளி)
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் புதல்வி நான் தான் என புலம்பெயர்நாடுகளின் உலாவிவரும் போலி நபருக்கு எதிராக மரபணு கூற்று பரிசோதனை செய்ய தயார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைவர் பிரபாகரனின் அண்ணாவின் மகன் கார்த்திக் மனோகரன், ஐபிசி தமிழ் ஊடகத்திற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே இதனை கூறியுள்ளார்.
பழநெடுமாறனின் கருத்து
தலைவர் பிரபாகரன் மற்றும் அவரது குடும்பம் உயிருடன் இருப்பதாக கடந்த வருடம் பழநெடுமாறன் தெரிவித்ததை கடுமையாக கண்டித்த தலைவரின் மனைவியின் தங்கை அருணா தற்போது தலைகீழான கருத்தை வெளியிடுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை, மாவீரர் நாளன்று தலைவர் பிரபாகரனின் புதல்வி என வெளியான காணொளி பொய்யானது என தெரிவித்த கார்த்திக், உண்மையில் மாவீரர் நாளன்று துவாரகா தலைவிரி கோலத்துடன் வரமாட்டார் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறானா சூழலில், தலைவர் பிரபாகரனின் புதல்வி நான் தான் என புலம்பெயர்நாடுகளின் உலாவிவரும் அந்த போலி நபருக்கு எதிராக மரபணு கூற்று பரிசோதனை செய்ய நாங்கள் தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 1 வாரம் முன்
