உடன் அமுலுக்கு வரும் வகையில் வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கான கட்டாய நடவடிக்கை
srilanka
abroad
quarantine
travel
By Sumithiran
வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகை தரும் அனைவரையும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தும் நடவடிக்கை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர்நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிவித்தலிலேயே மேற்கண்ட விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையர்கள், இரட்டை பிரஜாவுரிமை கொண்டவர்கள், சுற்றுலா பயணிகள், வெளிநாட்டு பிரஜைகள் மற்றும் இராஜதந்திர அதிகாரிகள் என நாட்டிற்கு வருகை தரும் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
உடன் அமுலுக்குவரும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இந்த நடைமுறை, எதிர்வரும் 31ம் திகதி வரை செல்லுபடியாகும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்