ஆசியாவில் மற்றுமொரு பிரம்மாண்ட இந்து கோவில்: திறந்து வைக்கவுள்ள நரேந்திர மோடி
ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபுதாபியில் கட்டப்பட்டுள்ள முதல் இந்து கோவிலானது பெப்ரவரி 14ஆம் திகதி திறக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரபு நாடான ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) தலைநகர் அபுதாபியில் ஆசியாவின் மிகப்பெரிய கோவில் கட்டும் பணி முடிவடைய உள்ளது.
இந்த கோவிலின் கும்பாபிஷே நிகழ்வானது பிப்ரவரி 14-ஆம் திகதி வசந்த பஞ்சமி அன்று நடைபெறவுள்ளதுடன் இந்த கோவிலை இந்திய பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கவுள்ளார்.
ஆசியாவின் மிகப்பெரிய கோவில்
27 ஏக்கர் பரப்பளவில் இந்த கோவில் கட்டப்பட்டுள்ளதுடன் அதில் பாதி வாகனத்தரிப்பிடமாக உள்ளது.கோவிலுக்கு 10 ஆயிரம் பேர் வரலாம் என கூறப்படுகின்றது. இதன் அடிக்கல் 6 ஆண்டுகளுக்கு முன் நாட்டப்பட்டதுடன் கோவில் கட்டும் பணி தற்போது கடைசி கட்டத்தில் உள்ளது.
மேலும் இங்கு இரும்பு, எஃகு போன்ற உலோகங்கள் பயன்படுத்தப்படவில்லை என கூறப்பட்டுள்ளது. கோவிலின் பிரதான குவிமாடம் நிலவு, நீர், நெருப்பு, வானம் மற்றும் காற்று ஆகியவற்றுடன் அரபு கட்டிடக்கலையில் சந்திரனை சித்தரிப்பதுடன் இது முஸ்லிம் சமூகத்தில் மகத்தான முக்கியத்துவத்தையும் எடுத்து காட்டுவதாக உள்ளது.
இந்த கோவில் அனைத்து மதத்தினரையும் வரவேற்கும் மற்றும் இந்திய மற்றும் அரேபிய கலாச்சாரங்களின் இணைவினை கொண்டுள்ளது. தூண்கள் முதல் கூரை வரை சிற்ப வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட பளிங்கு கற்கள்
இதற்கு இந்தியாவிலிருந்து 700 கொள்கலன்களில் 20 டன்களுக்கும் அதிகமான கல் மற்றும் பளிங்கு கற்கள் அனுப்பப்பட்டுள்ளன.
இந்த கோவிலில் ஏழு சிகரங்கள் உள்ளன, இது ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஏழு எமிரேட்களைக் குறிக்கிறது.
ராமர்-சீதை, சிவன்-பார்வதி உள்ளிட்ட ஏழு கடவுள்களும் தெய்வங்களும் கோயிலில் இருப்பார்கள். மகாபாரதம் மற்றும் கீதையின் கதைகள் வெளிப்புற சுவர்களின் கற்களில் கைவினைகளால் சித்தரிக்கப்பட்டுள்ளன.
அயோத்தி நகரம்
முழு ராமாயணம், ஜெகந்நாத் யாத்திரை மற்றும் சிவபுராணம் ஆகியவை சுவர்களில் உள்ள கற்களில் செதுக்கப்பட்டுள்ளன.
அயோத்தி நகரம் முழுவதும் 3டி வடிவில் கல் அமைப்பில் செதுக்கப்பட்டுள்ளது, சிறுவயதில் நாம் கேள்விப்பட்ட கதைகள் அனைத்தும் கோவிலை சுற்றி வரும்போது சிற்ப வடிவில் காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |