ஏ9 வீதியில் விபத்து
accident
today
road
a9
By Vanan
கிளிநொச்சி மாவட்டத்தின் பளை காவல்துறை பிரிவிற்கு உட்பட்ட ஆனையிறவுப் பகுதியில் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவமானது இன்று(28) இரவு 9.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
திருத்த வேலைக்காக ஏ9 வீதி அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பர் வாகனத்துடன், பளையில் இருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி மோதுண்டதால் விபத்து சம்பவித்துள்ளது.
சம்பவத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த சிறுவன் ஒருவருக்கு காலில் காயமேற்பட்டுள்ள நிலையில் 1990 நோயாளர் காவு வண்டி மூலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை பளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.