கொழும்பு - கண்டி வீதியில் பயணித்த பேருந்து மீது பாறை விழுந்து விபத்து
By Dharu
கண்டி - கொழும்பு பிரதான வீதியின் கடுகண்ணாவை பகுதியில் இன்று பிற்பகல் பயணித்துக்கொண்டிருந்த பேருந்து ஒன்றின் மீது திடீரென பெரிய பாறை ஒன்று உருண்டு விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த எதிர்பாராத அனர்த்தத்தில் பேருந்தில் பயணம் செய்த இருவர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ச்சியாக நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாகவே இந்த மலைப்பாங்கான பகுதியில் பாறைச் சரிவு ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவம் காரணமாக இப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.




மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி