மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: சக்கர நாற்காலியில் சென்ற முதியர் பரிதாப பலி
Sri Lanka Police Investigation
Accident
Death
Arrest
By Pavi
பன்னல காவல்துறையினர் பிரிவுக்குட்பட்ட பன்னல - குளியாப்பிட்டிய வீதியின் யக்கவில பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில், சக்கர நாற்காலியில் பயணித்த 90 வயதுடைய முதியவர் உயிரிழந்துள்ளார்.
யக்கவில திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள், முன்னால் சக்கர நாற்காலியில் சென்றுகொண்டிருந்த மாற்றுத்திறனாளி நபருடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் பலத்த காயமடைந்த முதியவர் குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
உயிரிழந்தவர் யக்கவில பகுதியைச் சேர்ந்த 90 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளைச் செலுத்திய 42 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பன்னல காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி