புலமைப்பரிசில் பரீட்சை மீள் மதிப்பீட்டு முடிவுகள் இன்று வெளியீடு
Government Of Sri Lanka
Grade 05 Scholarship examination
Scholarship
By Pavi
புலமைப்பரிசில் பரீட்சையின் மீள் மதிப்பீட்டு முடிவுகளை வெளியிடுவதற்கு இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த பரிட்சை முடிவுகள் இன்று (17.10.2026) வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பரீட்சார்த்திகள் தமது பரீட்சை இலக்கத்தை உள்ளீடு செய்வதன் மூலம், பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளங்களான www.doenets.lk ஊடாக முடிவுகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
பரீட்சைகள் திணைக்களம்
மீள் மதிப்பீட்டு முடிவுகள் தொடர்பில் ஏதேனும் விசாரணைகள் இருப்பின், பரீட்சைகள் திணைக்களத்தின் பாடசாலைப் பரீட்சைகள் ஏற்பாடு மற்றும் பெறுபேறுகள் கிளையைத் தொடர்புகொள்ள முடியும்.

இதற்காகப் பின்வரும் தொலைபேசி இலக்கங்களைப் பயன்படுத்த முடியும் எனப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
- 011 278 4208
- 011 278 4537
- 011 278 5922
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி