கிளிநொச்சி டிப்போ சந்தியில் விபத்து(படங்கள்)
By Vanan
கிளிநொச்சி காவல்துறை பிரிவுக்குட்பட்ட டிப்போ சந்தியில் ஹயஸ் ரக வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளாகியது.
இச்சம்பவம் இன்றிரவு 6.30 மணி அளவில் இடம்பெற்றுள்ளது.
கடும் வாகன நெரிசல்
வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டிருந்த ஹயஸ் ரக வாகனம் வாகன நெரிசல் காரணமாக நிறுத்த முற்பட்ட வேளையில், பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதுண்டதில் இவ்விபத்து இடம் பெற்றுள்ளது.

கிளிநொச்சி டிப்போ சந்தியானது மாலை நேரங்களில் கடும் வாகன நெரிசல் காணப்படுகின்ற போதும், விபத்து இடம்பெற்ற வேளை குறித்த இடத்தில் போக்குவரத்து காவல்துறையினர் கடமையில் இல்லை எனவும் கூறப்படுகிறது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்