பசறையில் கோர விபத்து! நேரில் சென்று ஆறுதல் கூறிய பிரதமரின் இணைப்புச் செயலாளர்
srilanka
accident
passara badulla
By Vasanth
பசறை, 13ஆவது மைல்கல் பகுதியில் இன்று காலை ஏற்பட்ட கோர விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான், பதுளை நகர பிதான, இ.தொ.காவின் பதுளை மாவட்ட செயலாளர் டி.வி.சென்னன், முன்னாள் ஊவா மாகாண சபை உறுப்பினர் சிவலிங்கம் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு காயமடைந்தவர்களுக்காக சிகிச்சைகள் குறித்து ஆராய்ந்தனர்.
காயமடைந்தவர்களுக்கு மேலதிக சிகிச்சை தேவைப்படும் பட்சத்தில் அவர்களை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளையும் செய்துக்கொடுத்ததுடன், கொவிட் தொற்று காரணம் உயிரிழந்தவர்களுக்கு மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர். பரிசோதனைகளை துரிதப்படுத்தி உடல்களை குடும்பத்தாருக்கு விரைவாக பெற்றுக்கொடுக்கவும் நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.

