ஹங்வெல்லயில் விபத்து : ஸ்தலத்திலேயே இளைஞன் பலி!
Sri Lanka Police
Colombo
Sri Lanka Police Investigation
By Sathangani
ஹைலெவல் வீதியில் இடம்பெற்ற விபத்தில் 18 வயதான இளைஞன் ஒருவன் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.
ஹங்வெல்ல (Hanwella) - வனஹகொட பிரதேசத்தில் இன்று (28) காலை லொறி மற்றும் மோட்டார் சைக்கிள் மோதியதாலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
அவிசாவளை நோக்கி சென்றி லொறியின் எரிபொருள் தீர்ந்த நிலையில் வீதியோரம் நிறுத்தப்பட்டிருந்த போது, வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் லொறியின் பின்பகுதியில் மோதியுள்ளது.
இளைஞன் உயிரிழப்பு
இதேவேளை மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற ஹங்வெல்ல, கிராம்புல பிரதேசத்தைச் சேர்ந்த ஜனித் பிரியதர்ஷன என்ற இளைஞனே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பில் லொறியின் சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் ஹங்வெல்ல காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்