வவுனியா, ஒமந்தையில் வாகன விபத்து - ஒருவர் படுகாயம்
accident
vavuniya
omanthai
By Vanan
வவுனியா, ஓமந்தை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்விபத்து பற்றி தெரியவருவதாவது,
நெடுங்கேணியில் இருந்து வவுனியா நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டி ஓமந்தை பகுதியில் வைத்து வீதியின் மறுபக்கமாக திரும்பியுள்ளது.
இதன்போது வவுனியாவில் இருந்து ஓமந்தை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில் மோட்டார் சைக்கிள் சாரதியான மருதோடையைச் சேர்ந்த 30 வயதுடைய கமல்ராஜ் என்ற இளைஞன் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணையினை ஓமந்தை காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.