யாழில் விபத்து! பரிதாபகரமாக உயிரிழந்த பாடசாலை அதிபர்
Sri Lanka Police
Jaffna
Jaffna Teaching Hospital
By Kiruththikan
யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் விபத்து
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் பாடசாலை அதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சாவகச்சேரி வைத்தியசாலைக்கு முன்பாக உந்துருளியை பாரவூர்த்தி மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்தவர் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பைச் சேர்ந்த கந்தையா சத்தியசீலன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் மரணம்
விபத்தில் படுகாயம் அடைந்தவர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டிருந்த நிலையில், இன்று உயிரிழந்துள்ளார்.
கந்தையா சத்தியசீலன் முல்லைத்தீவு முத்தையன் கட்டு வலதுகரை முத்துவிநாயகர் தமிழ் கலவன் பாடசாலையின் அதிபர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்