மன்னார் - யாழ்ப்பாணம் பிரதான வீதியில் விபத்து : ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு!
Sri Lanka Police
Jaffna
Mannar
Sri Lanka Police Investigation
By Independent Writer
Courtesy: நயன்
மன்னார் - யாழ்ப்பாணம் ஏ-32 பிரதான வீதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளடன் நால்வர் காயமடைந்துள்ளனர்.
முழங்காவில் பகுதியில் இருந்து தனியார் நிறுவனம் ஒன்றிற்கு பணியாளர்களை ஏற்றி வந்த சிறிய ரக பேருந்தே இன்று (12) காலை பள்ளமடு பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது, பேருந்தில் பயணித்த 20 பேரில் ஒருவர் உயிரிழந்ததுடன், நான்கு பேர் காயங்களுடன் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காவல்துறையினர் விசாரணை
உயிரிழந்தவரின் சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அடம்பன் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்