கொழும்பு கண்டி வீதியில் இன்றுமாலை கோரவிபத்து : மூவர் உயிரிழப்பு
கொழும்பு – கண்டி பிரதான வீதியின் வரக்காப்பொல, மாஹேன பகுதியில் இன்று (7) பிற்பகல் வாகனமொன்றை முந்திச் செல்ல முற்பட்டவேளை இடம்பெற்ற விபத்தில் மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மேலும் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.
இவ்விபத்தில் இரு ஆண்கள் மற்றும் ஒரு பெண் உட்பட மூவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
படுகாயமடைந்த நால்வரும் வரக்காப்பொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வாகனமொன்றை முந்திச்செல்லமுற்பட்டபோது சம்பவம்
கொழும்பில் இருந்து கண்டி நோக்கிப் பயணித்த வான் முன்னால் சென்ற வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்ட வேளை, கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி எதிர்த்திசையில் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு (SLTB) சொந்தமான பேருந்துடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

இ.போ.ச சாரதி கைது
விபத்து தொடர்பாக இபோச பேருந்தின் சாரதி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதுடன், காயமடைந்த வானின் சாரதி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை வரக்காப்பொல காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |