வவுனியா - மன்னார் வீதியில் விபத்து! இளைஞன் பலி
Vavuniya
Accident
By Vanan
வவுனியா - மன்னார் வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் மரணமடைந்துள்ளதாக நெளுக்குளம் காவல்துறையினர் தெரிவித்தனர்.
நேற்று(20) நள்ளிரவு 4ஆம் கட்டைப் பகுதியில் இவ் விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த நபர் பயணித்த மோட்டர் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் இருந்த மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.
விசாரணை

இச்சம்பவத்தில் வவுனியா, வாரிக்குட்டியூர் பகுதியைச் சேர்ந்த வவுனியா மின்சார சபையில் கடமையாற்றும் 32 வயதுடைய சஜந்தன் என்ற இளைஞர் மரணமடைந்துள்ளார்.
விபத்து தொடர்பில் நெளுக்குளம் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி