விற்ற டிப்பர் எமனாய் வந்த துயரம்! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி
கிளிநொச்சி – பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இத்தாவில் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்தவர் பலியாகியுள்ளார்.
இதன்படி குறித்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று இரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பளை பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்துக் கொண்டிருந்த காருடன் , அதற்கு நேரெதிர் திசையில் பயணித்த டிப்பர் ரக வாகனம் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
குறித்த டிப்பர் வாகனம் வேகக்கட்டுப்பாட்டையிழந்து வீதியை விட்டு விலகி காருடன் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில், குறித்த சம்பவத்தில் பளை – தர்மங்கேணி பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய நபர் ஒருவரும், 14 மற்றும் 11 வயதுடைய சிறுவர்கள் இருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
மேலும் சந்தேகநபரான டிப்பர் வண்டியின் சாரதி தப்பியோடியுள்ளதுடன் அவரை கைது செய்வதற்கான தேடுதலை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை குறித்த விபத்தில் சிக்கிய அழகரத்தினம் சற்குணநாதன் ஒரு மணல் வியாபாரி ஆவார், அவர் வைத்திருந்த டிப்பர் வாகனமே அவர் உயிரிழக்கக் காரணமாக அமைந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவர் தன்னிடம் இருந்த டிப்பரை இன்னொருவருக்கு விற்பனை செய்திருந்ததாகவும் இருந்தபோதிலும் பெயர்மாற்றம் கூட இல்லாமல் வானத்தின் உடைமை காணப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.
விபத்துக்கான காரணம் தொடர்பில் பளைப் பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். அவருடைய வாகனமே அவரின் கார் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளமை துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
முதலாம் இணைப்பு ஏ 9 வீதியில், பளை - இத்தாவில் பகுதியில் சற்று முன்னர் இடம்பெற்ற விபத்தில்
சிறுவர்கள் இருவர் உயிரிழந்துள்ளதாக எமது செய்திளார் தெரிவித்தார்.
சம்பவத்தில் 9 மற்றும் 12 வயதுகளை உடைய சிறுவர்கள் இருவரே உயிரிழந்துள்ளனர்.
சம்பவத்தில் படுகாயம் அடைந்த சிறுவர்களின் தந்தை யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி நோக்கிய திசையில் கார் காணப்படுவதாவும் அதற்கு நேரெதிரே டிப்பர் காணப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.