அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து - இருவர் மரணம்
Accident
By pavan
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் நேற்று (14) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் இரு முதியவர்கள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
பின்னதுவையிலிருந்து கொட்டாவ நோக்கி பயணித்த லொறியின் சாரதி தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வீதியோரத்தில் வாகனத்தை நிறுத்தியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளர்.
அதே திசையில் பயணித்த மகிழுந்து பின்னால் வந்த லொறியுடன் மோதியதில் காரில் பயணித்த 4 பேர் காயமடைந்துள்ளனர்.
மேலதிக விசாரணை
விபத்தில் படுகாயமடைந்த நால்வரும் வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி இருவர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் திருக்கோவில் பகுதியைச் சேர்ந்த 70 மற்றும் 75 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பில் அதிவேக நெடுஞ்சாலை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி ஆலயம் சப்பறத் திருவிழா

2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி