கம்பஹாவில் கோர விபத்து - பரிதாபமாக உயிரிழந்த குடும்பஸ்தர்
Accident
Death
By pavan
நிட்டம்புவ வயங்கொட வீதியில் நிட்டம்புவ வித்யானந்த விகாரைகைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து சம்பவம் இன்று (02) காலை இடம்பெற்றுள்ளது.
நிட்டம்புவ புறநகர் பகுதியைச் சேர்ந்த கே.எம்.ஆரியசேன என்பவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபர் நிட்டம்புவ வித்யானந்த விகாரைக்கு அருகில் உள்ள பாதசாரி கடவையில் வீதியைக் கடக்கும்போது, லொறியால் மோதியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஆரம்பகட்ட விசாரணை
சாரதி லொறியை அதிவேகமாக செலுத்தியதால் அதனை கட்டுப்படுத்த முடியாமல் விபத்து ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி