மின்சாரம் தாக்கி உயிரிழந்த 22 வயது இளைஞன்! தமிழர் பகுதியில் நடந்த சம்பவம்
Sri Lanka Police
Vavuniya
Accident
By pavan
வவுனியா வடக்கு, சின்னடம்பன் பகுதியில் யானை வேலி மின்சாரம் தாக்கி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யானைகள், பன்றிகளின் அச்சுறுத்தல் காரணமாக அங்குள்ள தோட்டக் காணி ஒன்றுக்கு யானை வேலி போடப்பட்டிருந்தது.
குறித்த வேலிக்கு மின்சாரம் வழங்கப்பட்டிருந்த நிலையில் அதனை அவதானிக்காது குறித்த வேலி ஊடாக நேற்று மாலை (10) இளைஞன் ஒருவர் பயணித்துள்ளார்.
காவல்துறையினர் விசாரணை
இதன்போது யானைக்கு வைத்த மின்சார வேலியில் சிக்கி அவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் கனராயன்குளம், குறிசுட்டகுளம் பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய உலகநாதன் கஜந்தன் என்பவரென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் நெடுங்கேணி காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
YOU MAY LIKE THIS

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி