யாழில் கோர விபத்து - மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர் உயிரிழப்பு
Sri Lanka Police
Accident
By pavan
யாழ்ப்பாணம் நெல்லியடி - கொடிகாமம் வீதி கலிகை பகுதியில் வேகக் கட்டுப்பாட்டையிழந்த மோட்டார் சைக்கிள் பாலத்துக்குள் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்து இன்று அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறை விசாரணை

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்துக்கு முன்பாக உள்ள உணவகம் ஒன்றைச் சேர்ந்த செல்வநாயகம் வின்சன் மனோஜ்குமார் (வயது-31) மற்றும் கரவெட்டி வதிரியைச் சேர்ந்த விஜயகாந்த் நிசாந்தன் (வயது -29) ஆகிய இருவரே உயிரிழந்தனர்.
சம்பவம் தொடர்பில் நெல்லியடி காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.