கடைக்கு சென்ற சிறுமி மோதித்தள்ளிய மோட்டார் சைக்கிள் - விசாரணையினை முன்னெடுத்துள்ள பொலிஸார்
srilanka
accident
trincomalee
By Vasanth
திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மோட்டார் சைக்கிளொன்று மோதி விபத்துக்குள்ளானதில் சிறுமி பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் கந்தளாய் ஆதார வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளார்.
இவ்விபத்துச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் பேராறு பகுதியைச் சேர்ந்த 12 வயதுடைய சிறுமியொருவரே இவ்வாறு படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சம்கவம் தொடர்பில் தெரியவருகையில்,
கந்தளாய் பேராறு பிரதான வீதியில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும், கடையில் பொருட்களை வாங்கிக்கொண்டு வீதியை கடக்க முற்பட்ட போதே வேகமாக சென்ற மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்