கொழும்பில் இருந்து யாழ்பாணம் புறப்பட்ட இரண்டு இ.போ.ச. பேருந்துகள் சற்றுமுன்னர் விபத்து
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான இரண்டு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
இந்த விபத்து இன்று (15.11.2026) வவுனியா மாவட்டத்தில் பேயாடி கூழாங்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலதிக விசாரணை
விபத்தைத் தொடர்ந்து பேருந்துகளில் பயணித்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வேறு பேருந்துகளில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக வீதிகள் வழுக்கும் தன்மையுடன் காணப்பட்டதால், பேருந்தின் வேகத்தைக் கட்டுப்படுத்த சாரதியால் முடியாமல் போனதே விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், விபத்துக்கான துல்லியமான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |