திருகோணமலை - தம்பலகாமம் பகுதியில் விபத்து - இராணுவச் சிப்பாய் பலி
திருகோணமலை - தம்பலகாமம் பகுயிதில் இடம் பெற்ற வாகன விபத்தில் இளைஞன் ஒருவர் ஸ்தலத்தில் பலியாகியுள்ளதாக தம்பலகாமம் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் கந்தளாவ, கந்தளாய் எனும் முகவரியை வசிப்பிடமாகக் கொண்ட இராணுவச் சிப்பாயான அகில மல்சாந் வயது (22) என தெரியவருகிறது.
குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, இளைஞன் வீதியை கடக்க முற்பட்ட போது வாகனம் மோதி விட்டு சாரதி தப்பிச் சென்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரனையின் போது தெரியவருகிறது.
மோதி விட்டு தப்பிச் சென்ற வாகன சாரதியை கைது செய்ய தேடுதல் நடவடிக்கை எடுக்கப்படுவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலம் தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டு, திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டுசென்று பிரேத பரிசோதனையின் பின் உறவினர்களிடம் இன்று (2)ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை தம்பலகாமம் காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.