உயிரை காவுகொண்ட கோர விபத்து - பாடசாலை மாணவர் ஒருவர் பலி
மீகொடை கொடகம வட்டரக பகுதியில் மகிழுந்து ஒன்றும் உந்துருளி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இரத்தினபுரி, மூவாகம பெமானந்தா மாவத்தையில் வசிக்கும் 18 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளதாகவும், மற்றைய நபர் யார் என்பது இதுவரை தெரியவரவில்லை எனவும் மீகொடை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்தானது வத்தரக குணவர்தன மாவத்தை ஊடாக பயணிக்கும் போதே இடம்பெற்றுள்ளது.
விபத்து
விபத்தில் உந்துருளியில் பயணித்தவர்கள் ஹோமாகம பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும், மகிழுந்தின் சாரதியும் சிறு காயங்களுடன் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், உயிரிழந்த இருவரின் சடலங்களும் தற்போது ஹோமாகம ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)