ஈரான் தூதுவரை தாக்கிய வர்த்தகர் பிணையில் விடுதலை
சிறிலங்காவிற்கான ஈரான் இஸ்லாமிய குடியரசின் தூதுவர் கலாநிதி அலிரேசா டெல்கோஷைத் (Dr. Alireza Delkhosh) தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த வர்த்தகர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு கோட்டை (Colombo Fort Magistrate) நீதவான் கோசல சேனாதீர (Kosala Senadheera) முன்னிலையில் அவர் இன்று (22) முற்படுத்தப்பட்டதன் பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மே 18ஆம் திகதி கொழும்பு 02 முத்தையா வீதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றுக்கு அருகில் இடம்பெற்ற சம்பவத்தின் போது ஈரான் தூதுவரை தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் 33 வயதுடைய இளைஞர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
தாக்குதல் சம்பவம்
தூதுவர் தனது வாகனத்தில் பல்பொருள் அங்காடி ஒன்றின் கார் தரிப்பிடத்தி்ற்குள் நுழைந்த போது இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தூதுவரை தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வர்த்தகர் இன்று பிணையி்ல் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |