வடக்கில் முப்படையினர் வசமுள்ள காணி விடுவிப்பு: முன்னெடுக்கப்படும் நடவடிக்கை
வடக்கில் காணி விடுவிப்பு வீதிகளை திறப்பது மற்றும் பாடசாலைகளை நடத்துவது தொடர்பில் பல்வேறு தரப்பினர் முன்வைத்த கோரிக்கைகளுக்கு சாதகமான தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
அத்துடன் இந்த முன்னெடுப்புகளை மேற்கொள்கையில் ஏற்படும் தடைகள், அதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் பத்தாவது நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு தொடர்பான அமைச்சுசார் ஆலோசனை குழு கூட்டத்தில் ஆராயப்பட்டது.
ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க தலைமையில் கூடிய இந்தக் கூட்டத்தில், திருகோணமலை, மனையாவெளி பகுதியில் உள்ள 'சண்டி குடா' கடற்கரையை பொதுமக்கள் தடையின்றி பயன்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்கவும் மீன்பிடிப் பிரச்னைகளுக்குத் தீர்வுகளை வழங்கவும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டன.
தமிழ் மக்களுக்குரிய காணிகள்
இதேவேளை, முல்லைத்தீவு - கேப்பாப்புலவில் தமிழ் மக்களுக்குரிய காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், விடுவிக்கப்படாத காணிகளுக்கு பதிலீட்டுக் காணிகள் வழங்கப்பட்டதுடன், வீடுகளும் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவ அதிகாரிகளால் ஜனாதிபதியிடம் பொய்யான தகவல்கள் தெரிவிக்கப்பட்டதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிகரன் (T.Raviharan) தெரிவித்துள்ளார்.

இராணுவத்தின் குறித்த பொய்யான தகவலுக்கு எதிர்ப்புத் தெரிவித்த ரவிகரன் கேப்பாப்புலவில் விடுவிக்கப்படவேண்டியுள்ள காணிகள் குறித்து ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றக் கட்டடத்தொகுதியில் புதன்கிழமை (07) பாதுகாப்பு அமைச்சின் அமைச்சுசார் ஆலோசனைக்குழுக்கூட்டம் ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சர் அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இடம்பெற்ற போதேரவிகரன் மேற்கண்டவாறு ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தையிட்டி விகாரையும் தமிழ் மக்களின் உறுதியான நிலைப்பாடும் 10 மணி நேரம் முன்