கேப்பாப்புலவில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் : அநுரவிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

Sri Lanka Army Mullaitivu Anura Kumara Dissanayaka Thurairajah Raviharan
By Sathangani Jan 08, 2026 05:08 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

முல்லைத்தீவு - கேப்பாப்புலவில் தமிழ் மக்களுக்குரிய காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், விடுவிக்கப்படாத காணிகளுக்கு பதிலீட்டுக் காணிகள் வழங்கப்பட்டதுடன், வீடுகளும் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவ அதிகாரிகளால் ஜனாதிபதியிடம் பொய்யான தகவல்கள் தெரிவிக்கப்பட்டதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிகரன் (T.Raviharan) தெரிவித்துள்ளார்.

இராணுவத்தின் குறித்த பொய்யான தகவலுக்கு எதிர்ப்புத் தெரிவித்த ரவிகரன் கேப்பாப்புலவில் விடுவிக்கப்படவேண்டியுள்ள காணிகள் குறித்து ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றக் கட்டடத்தொகுதியில் புதன்கிழமை (07) பாதுகாப்பு அமைச்சின் அமைச்சுசார் ஆலோசனைக்குழுக்கூட்டம் ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சர் அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இடம்பெற்ற போதேரவிகரன் மேற்கண்டவாறு ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதிவேகமாக வந்த கார் மோதி 11 வயது சிறுவன் பலி

அதிவேகமாக வந்த கார் மோதி 11 வயது சிறுவன் பலி

 இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணி 

குறித்த விடயம் தொடர்பில் ரவிகரன் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், ”நாடாளுமன்றில் பாதுகாப்பு அமைச்சின் அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்கூட்டம் புதன்கிழமை (07) 04.00மணியளவில் நாடாளுமன்றக் கட்டடத்தொகுதியில் இடம்பெற்றது.

இக்கூட்டத்தில் ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சர் அநுரகுமார திசாநாயக்க, பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகர, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால, நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள், முப்படைகளின் தளபதிகள், அதிகாரிகளும் வருகை தந்திருந்தனர்.

கேப்பாப்புலவில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் : அநுரவிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை | Request Release Military Held Lands In Keppapulavu

அந்தவகையில் முல்லைத்தீவு கேப்பாப்புலவில் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணி விடுவிப்புத் தொடர்பில் பேசப்பட்டது.

குறித்த கேப்பாப்புலவு காணி விடுவிப்பு விடயத்தில் 44பேருக்குத்தான் காணிகள் விடுவிக்கவேண்டியிருந்ததாகவும், அதில் பெரும்பாலானவர்களின் காணிகள் விடுவிப்புச் செய்யப்பட்டுவிட்டதாகவும், இன்னும் குறிப்பிட்டளவானவர்களுக்கே கணிகள் விடுவிக்கவேண்டியுள்ளதாகவும் இதன்போது குறித்த கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த சில அதிகாரிகளால் உண்மைக்குப்புறம்பான தகவல்கள் வழங்கப்பட்டுக்கொண்டிருந்தன.

இந்நிலையில் குறுக்கீடு செய்து அதிகாரிகளால் வழங்கப்படுகின்ற தகவல்கள் தவறானவை என்பதை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தேன்.

லண்டனில் புலம்பெயர் ஈழத்தமிழர்களால் கவனயீர்ப்பு போராட்டம்

லண்டனில் புலம்பெயர் ஈழத்தமிழர்களால் கவனயீர்ப்பு போராட்டம்

உண்மைக்குப் புறம்பான கருத்துக்கள்

கேப்பாப்பிலவில் ஏற்கனவே இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்டிருந்த மக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டிருக்கின்றன. எனினும் 55 பேருக்குரிய 59.5ஏக்கர் காணிகளும், 4பேருக்குரிய 100ஏக்கர் மத்தியவகுப்புக் காணிகளும் இராணுவத்தினரால் இன்னும் விடுவிக்கப்படவேண்டியுள்ளது என சுட்டிக்காட்டினேன்.

இதன்போது இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள காணிகளுக்கு பதிலாக பதிலீட்டுக்காணிகள் மக்களுக்கு வழங்கப்பட்டதுடன், வீடுகளும் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளதாக தொடர்ந்தும் இராணுவத்தினரால் உண்மைக்குப் புறம்பான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

கேப்பாப்புலவில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் : அநுரவிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை | Request Release Military Held Lands In Keppapulavu

இந்தநிலையில் இராணுவத்தினர் தொடர்ந்தும் பிழையான தகவல்களை வழங்கிக்கொண்டிருக்கின்றனர் என்பதை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்தேன்.

அத்தோடு மக்களுக்கு பதிலீட்டுக் காணிகள் வழங்கப்படவில்லை. சீனியாமோட்டை என்னுமிடத்தில் சிறிய காணித் துண்டுகளில் தற்காலிகமாக வீடுகள் அமைத்து கேப்பாப்புலவு மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்ற விடயத்தினையும் ஜனாதிபதியிடம் தெளிவுபடுத்தினேன்.

அதேவேளை முறையற்ற விதத்திலேயே மக்களுக்கு அங்கு வீடுகள் அமைக்கப்பட்டு கேப்பாப்புலவு மக்கள் தற்காலிகமாக அங்கு தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்ற விடயத்தினையும் இதன்போது சுட்டிக்காட்டினேன்.

ஜனவரி 12 வரை யாழ்ப்பாணத்திற்கு ஆபத்து..! எச்சரிக்கும் நாகமுத்து பிரதீபராஜா

ஜனவரி 12 வரை யாழ்ப்பாணத்திற்கு ஆபத்து..! எச்சரிக்கும் நாகமுத்து பிரதீபராஜா

அறிக்கை கோரிய ஜனாதிபதி 

எதிர்காலத்தில் இராணுவத்தினர் காணிகளை விடுவித்த பிற்பாடு சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தப்படுவீர்கள், அதுவரை சீனியா மோட்டைப்பகுதியில் தற்காலிகமாகவே குடியேற்றப்படுகின்றீர்கள் என்ற அரச அதிகாரிகளின் வாக்குறுதிக்கமையவே மக்கள் அங்கு தற்காலிகமாக குடியேறித் தங்கியுள்ளனர் என்ற விடயத்தினையும் இதன்போது வெளிப்படுத்தியிருந்தேன்.

கேப்பாப்புலவில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் : அநுரவிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை | Request Release Military Held Lands In Keppapulavu

இந்நிலையில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலுள்ள தமது பூர்வீகக் காணிகள் விடுவிக்கப்படுமென்ற நம்பிக்கையுடனேயே கேப்பாப்புலவு மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர் என்ற விடயத்தினையும் இதன்போது ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியிருந்தேன்.

இந்த கேப்பாப்புலவு காணிவிடுவிப்பு தொடர்பான உண்மையான விபரங்களை முல்லைத்தீவு மாவட்ட செயலரிடமிருந்தும், கரைதுறைப்பற்று பிரதேசசெயலரிடமிருந்தும் பெற்றுக்கொள்ள முடியுமெனவும் இதன்போது ஜனாதிபதியிடம் தெரிவித்திருந்தேன்.

இந்தநிலையில் இராணுவத்தளபதியிடம் குறித்த கேப்பாப்புலவு காணிவிடுவிப்பு விடயம் தொடர்பான ஒரு அறிக்கையினை தமக்கு தருமாறு ஜனாதிபதி கோரியிருந்தார்.

இதுதொடர்பில் நானும் முல்லைத்தீவு மாவட்ட செயலாளருடனும், கரைதுறைப்பற்று பிரதேசசெயலருடனும் கலந்துரையாடி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வேன்” என தெரிவித்தார்.

லிட்ரோ எரிவாயு விலை குறித்து வெளியான அறிவிப்பு

லிட்ரோ எரிவாயு விலை குறித்து வெளியான அறிவிப்பு


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...
ReeCha
மரண அறிவித்தல்

கொடிகாமம், மீசாலை வடக்கு, Benken, Switzerland

08 Jan, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Cheam, United Kingdom

28 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toronto, Canada

30 Dec, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், இலங்கை, Toronto, Canada, Fairfield, United States, Rochester, United States, Annandale, United States

01 Jan, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, நியூ யோர்க், United States, Montreal, Canada, Toronto, Canada

02 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Toronto, Canada

07 Jan, 2026
மரண அறிவித்தல்

மாதகல் கிழக்கு, London, United Kingdom

30 Dec, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, நாவற்குழி, London, United Kingdom

30 Dec, 2025
மரண அறிவித்தல்

இணுவில், New Malden, United Kingdom

04 Jan, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toronto, Canada

01 Jan, 2016
28ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வவுனியா, கொழும்பு, நல்லூர்

09 Jan, 1997
4ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, வவுனியா

10 Jan, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்கன்குளம், பிரான்ஸ், France

09 Jan, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உயரப்புலம், Jaffna, Mississauga, Canada

02 Jan, 2024
மரண அறிவித்தல்

இணுவில், கொழும்பு, London, United Kingdom

22 Dec, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம்

06 Jan, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Wimbledon, United Kingdom, Thames Ditton, United Kingdom, Croydon, United Kingdom

09 Jan, 2024
22ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், தெஹிவளை

12 Jan, 2004
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், சுன்னாகம், London, United Kingdom

09 Jan, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி மேற்கு, டென்மார்க், Denmark, Milton Keynes, United Kingdom

10 Jan, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

08 Jan, 2011
மரண அறிவித்தல்

கரம்பொன், London, United Kingdom

04 Jan, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், கொழும்பு, கல்லடி, Dartford, United Kingdom

26 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், London, United Kingdom

06 Jan, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, அனலைதீவு 7ம் வட்டாரம், Neuss, Germany

09 Jan, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

13 Jan, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவக்கிரி, நல்லூர், மானிப்பாய், கொழும்பு, Bunschoten, Netherlands

20 Dec, 2024
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Zürich, Switzerland

06 Jan, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு, முரசுமோட்டை, பிரான்ஸ், France, கனடா, Canada

19 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, நவாலி வடக்கு, London, United Kingdom

07 Jan, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Klang, Malaysia, யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

08 Jan, 2022