லிட்ரோ எரிவாயு விலை குறித்து வெளியான அறிவிப்பு
2026 ஜனவரி மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு (Litro Gas) விலைகளில் எவ்வித மாற்றமும் செய்யப்படாது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
உலக சந்தையில் எரிவாயுவின் விலையில் சற்றே அதிகரிப்பு ஏற்பட்டிருந்த போதிலும், நுகர்வோரின் நலன் கருதி விலையை அதிகரிக்காமல் இருக்கத் தீர்மானித்ததாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, ஜனவரி மாதத்திலும் பழைய விலையிலேயே எரிவாயு சிலிண்டர்களைக் கொள்வனவு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய விலை
அதன்படி, 12.5 கிலோ கிராம் நிறையுடைய எரிவாயு சிலிண்டரின் விலை 3,690 ரூபாயாகவும், 5 கிலோ கிராம் நிறையுடைய எரிவாயு சிலிண்டரின் விலை 1,482 ரூபாயாகவும், 2.3 கிலோ கிராம் நிறையுடைய எரிவாயு சிலிண்டரின் விலை 694 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

அத்துடன் கடந்த நவம்பர் மாதமும் லிட்ரோ எரிவாயு விலையில் எந்தவித திருத்தமும் மேற்கொள்ளப்படவில்லை.
எனினும் லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் ஜனவரி 2 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அதன் உள்நாட்டு எரிவாயு விலையை அதிகரிப்பதாக அந்நிறுவனம் அறிவித்திருந்தது.
அதன்படி, 12.5 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை150 ரூபாயால் அதிகரித்து 4,250 ரூபாய் என்ற புதிய விலையில் விற்பனை செய்யப்படும்.
5 கிலோ எரிவாயு சிலிண்டர் 65 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 1,710 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |
தையிட்டி விகாரையும் தமிழ் மக்களின் உறுதியான நிலைப்பாடும் 4 மணி நேரம் முன்