புதிய சட்டமா அதிபராக சஞ்சய் ராஜரட்ணம் எப்போது பதவியேற்பார்?
colombo
sri lanka
sanjay-rajaratnam
By Shalini
இந்த வாரம் புதிய சட்டமா அதிபராக பதில் மன்றாடியர் நாயகம், ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சய் ராஜரட்ணம் பதவியேற்கவுள்ளார்.
அவரை சட்டமா அதிபராக நியமிப்பதற்கு நாடாளுமன்ற பேரவை நேற்றுமுன்தினம் இணக்கம் வெளியிட்டது. தற்போதைய சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவின் பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில், நாளை தமது பதவியிலிருந்து ஓய்வு பெறவுள்ளார்.
இதையடுத்து குறித்த பதவிக்கு தமிழரான சஞ்சய் ராஜரட்ணம் நியமிக்கப்படவுள்ளார்.
இதற்கான யோசனை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்