இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் காவல்துறை உத்தியோகத்தர் கைது
Sri Lanka Police
Sri Lanka
Crime
By Laksi
கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் 1 கோடி ரூபாய் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரை குருநாகல் பகுதியில் வைத்து கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காவல்துறை உத்தியோகத்தர் கைது
காவல்துறை மோசடி விசாரணைப் பணியகத்தில் கடமையாற்றும் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குப் பொறுப்பான பிரதி காவல்துறை மா அதிபர் ரொஹான் பிரேமரத்னவின் நேரடிக் கண்காணிப்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில், சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 7 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்